ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித் கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் அந்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇