இலங்கையின் முதலாவது, பிரெஞ்ச் ஃபிரைஸ் எனப்படும் உருளைக்கிழங்கு கீற்று உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் பந்துல குணவர்தன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் விவசாயிகளால் பயிரிடப்படும் உயர்தர உருளைக்கிழங்குகளை கொள்வனவு செய்து இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது பிரெஞ்ச் ஃபிரைஸ் எனப்படும் உருளைக்கிழங்கு கீற்று தொழிற்சாலை மூலம் இந்த உற்பத்திகள் இடம்பெறுகின்றன.
குறித்த பகுதியில் விளையும் உருளைக்கிழங்கிற்கு பெறுமதியை சேர்க்கும் திட்டமாக நவீன தொழில்நுட்பத்துடன் இந்த தொழிற்சாலை நிறுவனப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்டுள்ள நிறுவனமொன்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் உள்ளுர் மக்கள் தங்கள் உருளைக்கிழங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇