கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் நிதி அனுசரணையில் “வெற்றிக்கான மென் திறண்கள்” (Soft Skills for Success – S3) எனும் தொழில்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி 21/2/2024 அன்று சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
பங்குபற்றல் அணுகுமுறையில் இடம்பெற்ற இந்த சுய ஊக்குவிப்புப் பயிற்சியின் வளவாளராக கலாநிதி. துரைராஜா பிரஷாந்தன் கலந்து கொண்டார்.
நிகழ்வின் தொடக்க மற்றும் நிறைவு உரைகளை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக தொழில் வழிகாட்டல் ஒருங்கிணைப்பாளர் T.வாகீசனும், பயிற்சி நோக்க உரையை கிழக்குப் பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்க தலைவர் திரு.சீ.ஜெயக்குமாரும் வழங்கினர்.
சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் இடம்பெற்ற இப் பயிற்சி நிகழ்வில் EUSLAA பொருளாளர் திரு.G.D நிர்மல்ராஜ் உட்பட சுமார் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇