இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயற்றிட்டங்களை அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் (22.02.2024) அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலாளர்களின் தெரிவுகளின் கீழ் உதவிகள் மற்றும் பயிற்சிகள் மற்றும் வீட்டுத்திட்டங்களை நடைமுறைபடுத்துவது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மேலும் பல திட்டங்கள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇