வாகரை பிரதேச செயலகம், பனை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் GTZ நிறுவனமும் இணைந்து கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்பட்ட வாகரை கிராம சேவகர் பிரிவில் 01.03.2024 அன்று பனம் பொருள் உற்பத்தியினை மேம்படுத்தல் மற்றும் உள்ளுர் உட்பத்தியாளர்களை பயிற்றுவிக்கும் நோக்கோடு 30 பெண் பயனாளிகளை இலக்காக கொண்டு புதிய பயிற்சி நெறிகள் ஆரம்ப்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் சிறி விஜயந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பனை அபிவிருத்திக்கான முகாமையாளர் த.விஜயன் உட்பட கோறளைப்பற்று பிரதேச செயலகம் சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக 09 மாதங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி நெறி மாதமொன்றிற்கு 500000 இலட்சம் பெறுமதியான பனை உற்பத்திகளை மேற்கொண்டு நேரடியாக பனை அபிவிருத்தி அதிகார சபையே அப் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇