சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு “பெண்களை வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணியும் வர்த்தக கண்காட்சியும் 06.03.2024 அன்று முன்னெடுக்கப்பட்டது.
நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்த்துவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இயங்கி வரும் சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பினரால் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து கல்லடி பழைய பாலம் வரை மட்டக்களப்பு – கல்முனை வீதி வழியாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி கல்லடி பழைய பாலத்தை வந்தடைந்ததும், வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வர்த்தக கண்காட்சியானது சூரிய பெண்கள் அமைப்பின் கீழ் இயங்கும் சுய தொழில் முயற்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், இவ் வர்த்தக கண்காட்சியானது இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇