சீனாவின் BYD, முதல் முறையாக உலகின் சிறந்த மின்சார-வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.
சீனாவை சார்ந்த BYD நிறுவனம் முதல் முறையாக உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்கின் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சீன அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.
கடந்த ஆண்டின் இறுதியில் டெஸ்லா 4,84,000 வாகனங்களை வழங்கியுள்ளது, ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள 473,000 வாகனங்களை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் BYD அதே நேரத்தில் 5,26,000 மின்சார வாகன விற்பனையை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்க கொண்டது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் டெஸ்லா மொத்தமாக 1.8 மில்லியன் வாகனங்களை விற்றிருந்த நிலையில் BYD 1.58 மில்லியன் மின்சார வாகனங்களே விற்பனை செய்திருந்தது. இந்த சாதனையானது, மின்சார வாகனத் துறையை மேம்படுத்த உதவுவதில் நிறுவனம் கொண்ட முயற்சி. BYD நிறுவனம், நுகர்வோருக்கு சீனாவின் குறைந்த விலை மின்சார வாகனங்களை வாங்க தூண்டியது.
நிருபர்களின் கூற்றுப்படி, BYD-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம். அவை மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த கூறுகளில் ஒன்று. BYD-ன் போட்டியாளர்கள் பலர் மூன்றாம் தரப்பு பேட்டரி தயாரிப்பாளர்களை சார்ந்துள்ளனர்.
ஆனால் BYD நிறுவனம் தானே பேட்டரி தயாரிப்பதால் இந்த சாதனை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், BYD இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீல் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய BYD சீல் மாடலின் விலை ரூ. 41 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் BYD மற்றும் ஒட்டோ 3 மாடல்களின் வரிசையில் BYD சீல் மூன்றாவது மாடல் ஆகும்.
புதிய BYD சீல் மாடல் டைனமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆர்க்டிக் புளூ, அரோரா வைட், அட்லான்டிஸ் கிரே மற்றும் காஸ்மோஸ் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
தோற்றத்தில் இந்த கார் டெஸ்லா மாடல் 3 போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் ஏரோ வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், பின்புறம் எல்.இ.டி. பார், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், பிளாக் டிஃப்யுசர் உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை பி.ஒய்.டி. சீல் மாடலில் அதிநவீன இன்டெலிஜன்ட் காக்பிட், 15.6 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.2 இன்ச் எல்.சி.டி. டிரைவர் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஏ.சி. வென்ட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளன.
இத்துடன் 360 டிகிரி கேமரா, இரு வயர்லெஸ் போன் சார்ஜர்கள், முன்புறம் பவர்டு மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ADAS பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடல் 61.44 கிலோவாட் ஹவர் மற்றும் 72.56 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை முறையே 510 கிலோமீட்டர்கள் மற்றும் 650 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் பேஸ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 201 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டாப் என்ட் மாடலில் உள்ள பேட்டரி 308 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் 523 ஹெச்.பி. பவர், 670 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
விலை விவரங்கள்: (இந்திய ரூபாய்)
BYD சீல் டைனமிக் ரூ. 41 லட்சம்
BYD சீல் பிரீமியம் ரூ. 45 லட்சத்து 55 ஆயிரம்
BYD சீல் பெர்ஃபார்மன்ஸ் ரூ. 53 லட்சம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇