ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF Sri Lanka மற்றும் CERI Sri Lanka நிறுவனங்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சிறுவர் நேய மாநகர் எனும் எண்ணக்கரு பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
CERI நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் திரு எபநேசர் தர்ஷனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் UNICEF நிறுவனப் பிரதிநிதிகளான கதீஜா மற்றும் நிபால், CERI நிறுவன உத்தியோகத்தர் ரினோஸா ஆகியோரால் சிறுவர்நேய மாநகர் பற்றிய விளக்கமும், CERI நிறுவனத்தால் கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றிய அறிமுகமும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ADT, Amcor Ngo , BERENDINA, Fpa Suwasewa Batticaloa Ppcc Batticaloa , LIFT NGO, விமோச்சனா இல்லம், Ymca Batticaloa உட்பட பல்வேறு அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் மட்டக்களப்பு மாநகரசபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
UNICEF நிறுவனத்தினால் இவ் வேலைத் திட்டத்திற்காக புதிய பங்காளர் நிறுவனங்கள் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் அதற்கான கோரிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.