மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி . சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் 12.03.2024 அன்று நடைபெற்றது.
நான்கு மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறியில் தெரிவு செய்யப்பட்ட 50 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு செயற்றிட்டத்தை வலுவூட்டும் செயற்றிட்டமாக இப் பயிற்சிப்பட்டறை அமையவுள்ளது.
கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம், மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் , மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய திட்ட அதிகாரிகளான எஸ். நிதர்சனா மற்றும் எம். சுசந்தன், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇