இலண்டன் ஈழப்பதஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 19.03.2024 அன்று செங்கலடியில் இடம்பெற்றது.
இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான நா.ஆனந்தராஜா, லோ.அனோஜன் ஆகியோரது ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வானது, செங்கலடி ரமேஸ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் அதன் பிரதமகுரு சிவசிறி. த.ஜெயக்குமார் குருக்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
தலா 42 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த துவிச்சக்கர வண்டியானது இலண்டனில் வசிக்கும் கிரோசிக்கா கிரிசாந்தனுடைய 12 ஆவது பிறந்த நாளையொட்டி, மாணவிகளின் கல்வி மேம்பாட்டு முயற்சிக்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇