மட்டக்களப்பு மாவட்ட தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக குடிநீர் தினத்தை முன்னிட்டு 21.03.2024 அன்று மண்முனை மேற்கு காஞ்சிரங்குடா காமாட்சி மகா வித்தியாலயத்தில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி திருமதி. வி.சுலக்சனா தலைமையில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கௌரவ அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம், விசேட அதிதியாக காமாட்சி மகா வித்தியாலயத்தினுடைய அதிபர் செ.பரா, காஞ்சிரங்குடா கிராம நிலதிகாரி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் காஞ்சிரங்குடா கிராமத்தின் சரஸ்வதி நீர்ப்பாவனையாளர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து சரஸ்வதி நீர்ப்பாவனையாளர் சங்க குடிநீர் திட்ட காரியாலய கட்டடத்திலே சிரமதான நிகழ்வும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇