பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
24.03.2024 அன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் 24.03.2024 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதியின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇