ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் அலுவலகம் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் குறித்த தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11, 12ஆம் திகதிகள் மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.