வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எப் பிரச்சினையும் இல்லை.
உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும்.
தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.
குறிப்பாக, எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால், நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும்.
அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால், வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்பு எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.
அப் பெட்டிகளில் ஒன்று , இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும்
வாக்களிக்க அப் பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇