சிறுவர் அபிவிருத்திக் குழுவின் இரண்டாவது காலாண்டுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் இரண்டாவது காலாண்டுக் கூட்டம் மட்டு திராய்மடுவில் அமைந்துள்ள மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19.08.2025 அன்று நடைபெற்றது.

குறித்த காலாண்டு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கிராமிய அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டடங்களில் முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்படாத விடையங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களால் முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் வழங்கப்பட்டன.

கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சரோஜா திட்டம், கட்டாயக் கல்விக் குழுவின் செயற்பாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் சிறுவர் தொடர்பான அபிலிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதல் துறைசார் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை தொடர்பாக பிரதேச செயலாளர்களால் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றிற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான ஆலோசனை மாவட்ட அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன், மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜமீல் உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் துறைசார் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects