பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி இரண்டு புதிய ரயில்கள் சேவையில் இணைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நானுஓயாவின் மலையகப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு குறுகிய தூர பயணத்திற்காக காட்சி கூட அறைகளுடன் விசேட சுற்றுலா ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சில பழைய ரோமானிய ரயில் பெட்டிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த ரயில் பெட்டிகள் பார்வையாளர் கூடங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதனூடாக, ரயில் பயணத்தின்போது, இயற்கையை கண்டுகளிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகளுக்காக ரயில்வே திணைக்களம் 55 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.
இரத்மலானையிலுள்ள பிரதான ரயில் இயந்திர தொழிற்சாலையின் ஊடாக, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்த ரோமானிய ரயில் பெட்டிகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
1924 ஆம் ஆண்டு பதுளை மார்க்கத்தினூடான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇