நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு தினங்களுக்கான பாடத் திட்டங்களை வேறு நாட்களில் நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.