இலங்கைக்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து ஜனவரி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 52,061 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 29,540 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 27,134 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 17,776 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 14,003 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸலிருந்து 13,569 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 11,172 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects