பிரித்தானிய முத்தமிழ் மன்றத்தின் நிதி அனுசரணையில் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணி அமிர்தகழி மற்றும் சின்ன ஊரணியில் உள்ள 40 குடும்பங்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் சிவாநந்தா பழைய மாணவர் சங்க தலைவருமான வீ.வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர் ஷியாகுல் ஹக், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சிவாநந்தா பழைய மாணவர்கள் மற்றும் சிவாநந்தா பட்டமுன் சங்க அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇