செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவான 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
13 இலட்சத்து 77 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பணம், நாளை முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇