வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 27/05/2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் , இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டு தூதுவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் 3329 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இக் கட்டடத்திற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப் புதிய கட்டடத்தில் இருதய சிகிச்சை பிரிவு, ஆய்வு கூடம் (Cath Lab ) , இருதய அவசர சிகிச்சை பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு பிரிவு, ஸ்கேன் பிரிவு, நோயாளர் விடுதி உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் கூடிய பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇