பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத வேதன உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் 27.03.2024 அன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலுக்கு தேசிய தொழிலாளர் சபையில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அழைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்துள்ள 33 சதவீத வேதன அதிகரிப்பை ஏற்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇