—×××—
AU Lanka நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி, மறைந்த திரு. பேர்னாட் பிரகாஷ் ஞாபகார்த்தமாக சத்துமா உற்பத்தி நிலையம் ஒன்று மட்டக்களப்பு – ஆயித்தியமலையில் 27-03-2024 அன்று திறந்துவைக்கப்பட்டது.
AU Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனும், விசேட அதிதிகளாக திரு. பேர்னாட் பிரகாசின் மனைவி திருமதி. ரோஷினி முருகுப்பிள்ளை, ChildFund நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அதீதி கொஷ், ChildFund நிறுவனத்தின் வர்த்தக அபிவிருத்திப் பணிப்பாளர் தினந்த தம்பவிட்ட, வவுணதீவு பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி, உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
சமார் 19 மில்லியன் ரூபா நிதியில் உருவாக்கப்ட்ட இச் சத்துமா உற்பத்தி நிலையத்திற்கான நிதியினை இலங்கை ChildFund ஊடாக நியுசிலாந்து நாட்டு ChildFund நிறுவனம் வழங்கியிருந்ததுடன், இவ்வேலைத்திட்டம் Action Unity Lanka நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டமானது பல்வேறு போசாக்கு நிறைந்த தானியங்களின் கலவையாக சத்துமா மற்றும் உடனடியாக உட்கொள்ளத்தக்க தானிய சிற்றுண்டி என்பன உற்பத்தி செய்வதற்கு மட்டுமன்றி இப்பிரதேச பெண்களுக்கான வேலைவாய்ப்பினையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇