நாடு முழுவதும் 85 கிராமங்களை மாதிரி தென்னை பயிர்ச்செய்கைக் கிராமங்களாக பெயரிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் முதலாவது தென்னை பயிர்ச்செய்கை மாதிரி கிராமமாக ஹோமாகம, தம்பே பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 85 கிராமங்களுக்கும் 50,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்க விவசாய அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் முதலாவது தென்னை பயிர்ச்செய்கை மாதிரி கிராமமான தம்பே கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 27.03.2024 அன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அலுவல்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. .
இலங்கையில் இளநீருக்கு சர்வதேச அளவில் அதிக தேவை இருந்த போதிலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇