வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த வருடம் நாடு முழுவதும் 8,000இற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், இதுவரை பதிவு செய்யப்பட்ட தன்சல்களின் எண்ணிக்கை 8,742 என்று அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த தன்சல்களில் அதிகளவானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தன்சல் வழங்கும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பாவனையை இயன்றளவு குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










