ஹோனர் மெஜிக் V5 (Honor Magic V5) என்ற கையடக்க தொலைபேசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த கையடக்க தொலைபேசியின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கையடக்க தொலைபேசி நான்கு வர்ணங்களில் விற்பனைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கையடக்க தொலைபேசிகள் 12GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஸ்டோரேஜ் (Storage) அம்சங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசி என்றும் கூறப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










