உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உணவுப்பொதி யொன்று 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர கொத்து ரொட்டி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், தேநீர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.