சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘வலுவான எதிர்பார்ப்பு உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇