மட்டக்களப்பு மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வியாபார மற்றும் தொழில் வலையமைப்புக்களுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில், விவசாய சம்மேளனத்தின் தலைவர் வீ.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனத்துடன் இணைந்து அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களக்குமிடையிலான திறந்த கலந்துரையாடலாக இது இடம் பெற்றது .
நிகழ்வின் வளவாளராக பேராசிரியர் கணேசராஜா கலந்து கொண்டு தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கியிருந்தார்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றி விற்பனை மேற்கொள்ளுதல் மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான திறந்த அனுபவ பகிர்வு என்பன இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி அருளானந்தம் , அரச அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக பிரதிநிதிகள், மட்டு சிறு தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.ஆர்.கோகிலாதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇