சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதில் சுங்க அதிகாரிகள் தலையிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பொருட்களின் விடுவிப்பு பணிகளை மீட்டெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇