சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் 19.11.2025 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரனின் தலைமையில், மட்டக்களப்பு தொற்றாநோய் தடுப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமாரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று காந்தி பூங்காவை அடைந்தது. இதன்போது நீரிழிவு நோயின் தாக்கம் அதற்கான சிகிச்சை முறை மற்றும் அதன் தாக்கம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காந்தி பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் நீரிழிவு நோய் என்றால் என்ன, நீரிழிவு தினத்தின் அறிமுகம், இந் நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் மயில்வாகனம் ருதேசன், மட்டக்களப்பு மாவட்ட கால் நடை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் துஷ்யந்தன், லயன்ஸ் கழகத்தினுடைய 306. D 10 மாவட்ட ஆளுநர் லோகேந்திரன், லயன்ஸ் கழகத்தினுடைய திட்டமிடல் பணிப்பாளரும் பொறியியலாளருமான சோதி ராஜா, திட்டமிடல் ஆலோசகர் D.R செல்வேந்திரன், லயன்ஸ் கழக செயலாளரும் சட்டத்தரணியுமான ம.பகீரதன், லயன்ஸ் கழக பொருளாளரும் மின் அத்தியட்சகருமான M. சிவகுமார், லயன்ஸ் கழக உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நிகழ்வினை ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தியவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினுடைய 306. D 10 மாவட்ட ஆளுநரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரனும், மட்டக்களப்பு தொற்றாநோய் தடுப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமாரும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(புகைப்பட உதவி – M.சிவகுமார்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects