இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு குளிரூட்டி வசதிகளுடன் கூடிய உழவு இயந்திரங்கள், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு ஐஸ் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் அளவீட்டு இயந்திரங்கள், தேசிய நீர்வாழ் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வலைகளையும் வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇