டிஜிட்டல் சேவைகளுக்கான VAT வரி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் 2025 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு VAT விதிக்கப்படும், மேலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இப் புதிய டிஜிட்டல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை 2025 ஜூலை மாதம் முதலாம் திகதியன்று 2443/30 இலக்க விசேட வர்த்தமானி ஊடாக வெளியிட்டிருந்தது.

இலங்கையில் நபர் ஒருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் VAT-க்கு பதிவு செய்வது கட்டாயமாகும்.

அதன் படி,

E-commerce Services

Cloud Computing

Software as a service (SaaS)

Cybersecurity Services

Digital Marketing & Advertising

IT support & Managed Services

Streaming Services

Fin Tech

Subscription & Membership Website

E-commerce Platforms

Social Media Platforms

On Demand Service Platforms

Content Sharing Platforms

Cloud Collaboration Platforms

Market Place Platforms

Gaming Platforms

Blockchain & NFT Platforms

Apps for hotel bookings and ticket reservations

மேலே குறிப்பிடப்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்குவது, 2025 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 18% VAT விகிதத்திற்கு உட்பட்டதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects