உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட எல்லே போட்டியில் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணியினர் முதலாமிடத்தையும் முனைக்காடு பாடசாலைகள் அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ. உதயகுமாரன் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் வழிப்படுத்தலிலும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளில் காணப்படும் 21 பாடசாலைகளை ஒருங்கிணைத்து எல்லே சுற்றுப்போட்டியானது மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இவ் எல்லே சுற்றுப்போட்டியில் ஆண் பெண்கள் இணைந்த அணியாக பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இவ் எல்லே சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
21 பாடசாலைகளை சேர்ந்த 10 அணிகள் பங்கு பற்றிய இந்த தொடரில் இறுதிப்போட்டியில் மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம் மற்றும் மட்/மமே/ முனைக்காடு சாரதா வித்தியாலயம் இணைந்த அணியும் மட்/மமே/ கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணியும் தெரிவாகியதுடன் முதலில் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட முனைக்காடு பாடசாலைகள் அணி 4 ஓட்டங்களை சேகரித்திருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை அணி 5 ஓட்டங்களை பெற்று ஆசிரியர் தின எல்லே சுற்றுப்போட்டியின் சம்பியனானக தெரிவானது அதனை தொடர்ந்து இடம்பெற்ற அதிபர் அணியுடனான சிறப்பு போட்டியிலும் கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.