இஸ்ரேலில் நிர்மாணத்துறை தொழிலுக்காக 4,500க்கும் அதிகமான இலங்கை பணியாளர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 1,802 பேர் தொழிலுக்காக இஸ்ரேல் செல்லவுள்ளனர்.
இஸ்ரேலில் நிர்மாணத்துறை தொழில் வாய்ப்புக்காக சீட்டிழுப்பு முறைமை மூலம் பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇