முழுமையான சூரிய கிரகணம் இன்று (08.04.2024) தோன்றவுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. அரிதாகவே இந்த முழுமையான சூரியகிரகணம் தோன்றும்.
இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு இல்லை.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வசிக்கும் மக்கள் குறித்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்க முடியும்.
இலங்கை நேரப்படி இந்த முழு சூரிய கிரகணமானது இன்று (08.04.2024) இரவு 9.12 மணி முதல் நாளை (09.04.2024) பிற்பகல் 2.22 மணி வரை தோன்றும்.
இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










