கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த ஆண்டு 15,693 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழான 2024ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கூட்டம் 09.04.2024 அன்று இடம்பெற்றது.
விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் நீர்ப்பாசன குளங்களின் முறைமைகளே இம்முறை கிளிநொச்சியிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇