ஏப்ரல் மாத பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இது, “பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் மற்றும் கடுமையான மருத்துவ நிலைமைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல் ” என்ற தலைப்பில் வெளியிட்டப்பட்டுள்ளது.
“தலையணை சண்டை” மற்றும் ” கண்கட்டி முட்டி உடைத்தல்” போன்ற பாரம்பரிய விளையாட்டுகளாக இருந்தாலும் சரி அல்லது மரதன் ஓட்டப்போட்டி, சைக்கிள் ஒட்டப்போட்டி போன்ற நிகழ்வாக இருந்தாலும் அபாயங்கள் ஏற்படும்.
எனவே, பண்டிகை கால விளையாட்டு நிகழ்வுகளின் போது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை குறித்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
அதில், விபத்துக்கள் மற்றும் கடுமையான மருத்துவ நிலைமைகள் போன்ற அபாயங்களைக் குறைக்க நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் சமூக குழுக்களுக்கு அத்தியாவசிய உத்திகளை வழங்குகின்றன.
அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டத்தை உறுதிசெய்ய கூட்டத்தை நிர்வகிப்பது முதல் சுற்றுச்சூழல் அபாயங்களை தடுப்பது வரையான பல்வேறு அம்சங்களை வழிகாட்டுதல் உள்ளடக்கியுள்ளது.
அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும், அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட நிகழ்வுகளிலும் பின்பற்ற வேண்டிய பொதுவான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு; https://shorturl.at/inMOW
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇