தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் 13-04-2024 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் முன்னிலையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்கள், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகள் போன்றோர் அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இவ்வாறு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇