இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் 15.04.2024 அன்று முதல் நீக்கியுள்ளது.
வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்தியா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇