நியுசிலாந்து அரசாங்கத்தின் நிதி அனுசரணையில், புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிலையத்தினால் (ICMPD) மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புலம்பெயர் தகவல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 24-04-2024 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
ICMPD நிறுவனப் பிரதிநிதி கொல்டா ரோமாவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நியுசிலாந்து நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் அன்று ட்ரவலர் உட்பட நியுசிலாந்து தூதரக அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள், புலம்பெயர் தகவல் நிலையத்தின் உத்தியோகத்தர் சரத் பள்ளேகம, சிவில் சமூக அமைப்புக்களான AMCOR, ESCO, LIFT மற்றும் World Vision ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
2016 ஆம் ஆண்டு முதல் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், வங்காளதேசம் உட்பட பல நாடுகளில் ICMPD நிறுவனத்தினால் சுமார் 10 புலம்பெயர் வள நிலையங்கள் திறக்கப்பட்டு 110 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் முதலாவது நிலையம் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் கொல்டா ரோமா தெரிவித்தார்.
இதன்போது எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇