2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.
இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் இதன் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇