06.05.2024 அன்று ஆரம்பமாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை மதிப்பிடும் பணி 2 கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்காக சுமார் 35,000 பரீட்சகர்கள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.
இம்முறை பரீட்சையில் 452,979 பரீட்சாத்திகள் தோற்றுகின்றனர்.
387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இதில் அடங்குகின்றனர்.
இதனிடையே, பரீட்சை காலப்பகுதிக்குள் ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாயின் அதற்கு முகங்கொடுப்பதற்காக அனைத்து பிரிவினரும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇