கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதன் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பு 13.05.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதியாக கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆந் திகதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க அரச உயர் அதிகாரிகளை சந்தித்தல் மற்றும் மதஸ்தலங்களை தரிசித்து சமயத் தலைவர்களிடம் ஆசீர் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தில் நிலவும் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு கல்லடி 243வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇