இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய யூடியூபரான அருண் ரூபேஷ் மைனி, உலகின் மிகப்பெரிய iPhone ஐ உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவர், 6.74 அடி உயரத்தில் iPhone 15 Pro Max இன் மாதிரியை வடிவமைத்துள்ளார்.
இதனை உருவாக்க இந்திய மதிப்பில் சுமார் ரூ.59 இலட்சம் வரை செலவானதாகவும், ஓராண்டு எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மைனி, “இதனை முழு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணமாக உணர்கிறேன்.
இதுவரை செய்யாத ஒன்றைச் செய்ததற்காக எங்கள் அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇