எதிர்வரும் வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சந்தையை அவதானிக்கும் போது, பொலித்தீன் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட வெசாக் அலங்காரங்கள் பல நாட்களுக்கு காணப்படுவதாகவும், ஆனால் அவ்வாறான பொருட்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பல மாற்று வழிகள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துமாறும் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் பிரகாரம் பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇