நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அத்தனுகலு ஓயா, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇