பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிவிசேட வர்த்தமானியை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்……
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇