கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வருகை தரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை முனையத்தை விட்டு வெளியேற வேண்டும்.
அத்துடன், 30 நிமிடங்களுக்கு மேல் விமான நிலையத்திற்கு அருகில் சுற்றித் திரியும் வாகனங்களின் சாரதிகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் பயணிகளின் பாதுகாப்புக்காகவும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇