இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக, நாடளாவிய ரீதியில் 23,422 குடும்பங்களைச் சேர்ந்த 120,000ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெள்ளம் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை முனையம் முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇